படித்தேன்!ரசித்தேன்!பாடல் புனைந்தேன்!
நீ தந்த……
பல்லவி
நீ தந்த தமிழாலுனைப்பாடித்துதித்தேன்
மாதே கலைவாணி எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
பூதலத்தோர் மற்றும் கேசவனயன் சிவனும்
மாதவம் புரிந்திடும் முனிவரும் பணியும் தாயே
சரணம்
வேத சாஸ்த்திர புரணாங்கள் கொண்டாடும்
நாதரூப சுந்தரியே தேவி
சாதாரணரையும் மேதாவியாகச்செய்யுமுன்
பாதம் பணிந்துன்னருள் வேண்டி
*****
सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।
विद्यारंभं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥
தேவி சரஸ்வதி– உனக்கு நமஸ்காரங்கள்.
வரம் தருபவளே! வேண்டியவற்றைத் தருபவளே!
கல்வித் தொடக்கத்தை செய்கிறேன்.
அனைத்தும் அடியேனுக்குச் சித்தி ஆகட்டும்!
No comments:
Post a Comment