வண்ணமயமானவளே….
பல்லவி
வண்ணமயமானவளே அன்னபூரணி
எண்ணமெலாம் நீயே உனதடி பணிந்தேன்
அனுபல்லவி
கண்ணன் கேசவன் சோதரியே மாயே
கண்ணபுரத்தாளாயிருப்பதுவும் நீயே
சரணம்
தண்மதி பிறைசூடிய ஈசன் நாயகியே
விண்ணவரும் மண்ணவரும் வியந்தேத்துமீச்வரியே
எண்திசையும் புகழ் விளங்கும் பெண்ணணங்கே பேரெழிலே
பண்ணிசைத்துன் புகழ் பாடி உன்னைச்சரணடைந்தேன்
No comments:
Post a Comment