Saturday, 13 April 2024

 தீபாராதனை சமயத்தில் எங்க தர்மாம்பாளை தர்சனம்  செய்வதே ஒரு தனி ஆனந்தம் தான். அவள் சந்நிதியில் நிற்கும் போது அவளை தவிர வேறு  நினைவே வராது.

சமயத்தில்  நாம் வேண்டிக் கொள்ள நினைத்தது கூட மறந்து விடும்.

நாம் மறந்தாலும்  அறம் வளர்த்த அன்னையவள்  நமக்கு

வேண்டியதையும்

வேண்டுவதையும்  வேண்டிய படி தந்திடுவாள்


முத்துச் சுடர்  தீப ஒளியில்

முத்தாரமின்னிட மோனத் தவமிருக்கும்

ஞானத் தாயவளின்  முத்து மூக்குத்தி 

எத்திக்கும் சௌதாமினிச் சுடரென மின்னிட

முகத்தாமரை மலர் முகிழ் நகையது 

முப்போதும் தப்பாது கவசமாய் காத்திட

எந்நாளும் ஆனந்தமானந்தமே

இன்றைய மெமரியில் வந்த இனிய பதிவு 

Kamakshi Muthukrishnan


        எத்திக்கும் சுடரென…..


                       பல்லவி

எத்திக்கும் சுடரென ஒளியுடனே காட்சி தரும்

சக்தியெனுமறம் வளர்த்த நாயகியைத் துதித்தேன்

                  அனுபல்லவி

முத்து மூக்குத்தி மின்ன முகத்தில் புன்னகையோடு

முக்தி தருமீச்வரியைக் கேசவன் சோதரியை

                     சரணம்

பக்தி செய்யும் வேளையில் நாம் வேண்டுவதை மறந்தாலும்

உத்தமியவளதனை மறவாமல் அளித்திடுவாள்

புத்திக்கும் சொல்லுக்குமெட்டாத செயல்களெலாம்

முத்தாரம் மின்னுமவள் புரியமால் நடத்திடுவாள்


No comments:

Post a Comment