எக்காலத்திலுமுனை நான்…….
பல்லவி
எக்காலத்திலுமுனை நான் மறவேன்
முக்கண்ணியே ஶ்ரீ திரிபுரசுந்தரியே
துரிதம்
முக்கண்ணனிந்திரன் அயனரி அமரர்
சுகசனகாதியர் வணங்கிடுமன்னையே
அனுபல்லவி
சக்கரமும் சங்குமேந்தும் கேசவன் சோதரியே
வக்கிரக்காளியே வாகதீச்வரியே
சரணம்
அக்கிரமம் செய்த அரக்கர்களை அழிப்பவளே
சொக்கநாதனை மணந்த மீனாக்ஷியே
உக்கிரம் நிறைந்த வெக்காளியம்மனே
அக்கறையுடனடியாரைக் காப்பவளே
தக்கனின் வேள்வியையழித்த மலைமகளே
விக்கினங்கள் தீர்க்கும் விநாயகன் தாயே
எக்குறையுமணுகாமலெனைக்காக்குமீச்வரியே
பக்குவமாய்ப் பணிந்தேன் எனக்கருள்புரிவாய்
सिन्दूरारुणविग्रहां त्रिनयनां माणिक्यमौलिस्फुरत्
तारानायकशेखरां स्मितमुखीमापीनवक्षोरुहाम् ।
पाणिभ्यामलिपूर्णरत्नचषकं रक्तोत्पलं विभ्रतीं
सौम्यां रत्नघटस्थरक्तचरणां ध्यायेत्परामम्बिकाम् ॥