மயூரவல்லிநாதன்......
பல்லவி
மயூரவல்லிநாதன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
மயூரவாகனன் மனங்கவர் மாமன்
அகிலம் போற்றும் ஆதிகேசவன்
சரணம்
அறம் பொருள் இன்பம் அனைத்துமளித்திடும்
பரம்பொருள் அவனே மானவதிப்ரியனே
பிறப்பிறப்பறுத்திடும் பரமனும் அவனே
மறவேன் என்றென்றும் அவனிரு திருவடி
இராகம் : மானவதி தாளம் : ஆதி
No comments:
Post a Comment