பிரமராம்பிகே......
பல்லவி
பிரமராம்பிகே உன் சரணம் பணிந்தேன்
கராரவிந்தம் காண்பித்தபயம் தந்தருள்வாய்
அனுபல்லவி
அரவணிந்த பெருமான் மல்லீச்வரன் மனம் மகிழ
உறவு கொண்டவனருகில் வீற்றிருக்கும் தாயே
சரணம்
பிறவிப் பெருங்கடல் நீந்திட விரும்பி
அரவிந்த பதமலர் அடியிணை பற்றினேன்
உன்னருள் இல்லையேல் அன்னையே அவனியில்
ஓரணுவுமசையுமோ கேசவன் சோதரி
இராகம் : சஹானா தாளம் : கண்டசாபு
No comments:
Post a Comment