என் வாழ்வில்......
பல்லவி
என் வாழ்வில் இருள் நீக்கி அருள் மாரி பொழிபவளே
என் தாயே ஈச்வரியே எனை நீயே ஆதரி
அனுபல்லவி
தென்னாட்டில் வேற்காட்டில் அகத்தியரும் வணங்கிடவே
புற்றிலே ஐந்துதலைப் பாம்புருவாய் வடிவெடுத்த
கேசவன் சோதரி ஶ்ரீக்ருஷ்ணமாரி
சரணம்
முன்னாளில். யான் செய்த கன்மங்கள் தொலைந்து
இன்னாளில் வன்மமிலா வாழ்வினையே எனக்களித்து
பின்னாளில் இனிப் பிறவா வரம் தருவாய் தாயே
வெண்வேல மரத்தமர்ந்த கேசவன் சோதரி ஶ்ரீக்ருஷ்ணமாரி
இராகம் : புன்னாகவராளி தாளம் : கண்டசாபு
No comments:
Post a Comment