தாயே .....
பல்லவி
தாயே நீயே துணை மீனாக்ஷி
தென் மதுரையில் உந்தன் ஆட்சி
அனுபல்லவி
மாயே மலையத்வஜன் சேயே
மனங்கவர் சுந்தரேசப்ரியே
சரணம்
நல்லதும் தீயதும் நானறியேனே
சொல்வார் பேச்செலாம் கேட்டு அலைந்தேனே
பொல்லா மாயப்பிணியில் வீழ்ந்தேனே
எல்லாம் தொலைந்தென் ஜென்மம் ஈடேற
இராகம் : தோடி தாளம் : ரூபகம்
No comments:
Post a Comment