பரிகாசம் ஏனய்யா.......
பல்லவி
பரிகாசம் ஏனய்யா கேசவா
புரியாதவன் போல் சிலையாக நின்று
அனுபல்லவி
பரிந்தருள் வேண்டியே பாடிடும் என்னையே
தெரியாதவன் போல் பாவனை கொண்டு
சரணம்
தரித்திரன் குசேலன் கேட்காமலே
கருணையுடன் பொருள் அள்ளித்தந்தாய்
கரிராஜன் அழைத்ததும் விரைந்து சென்றாய்
சரி நிகர் இவருக்கு நானில்லையா
இராகம் : ஶ்ரீதீவிரவாஹினி ( 46ல் ஜன்யம்) தாளம்: ஆதி
No comments:
Post a Comment