கற்பகமே......
பல்லவி
கற்பகமே உன்னருள் தாராய் திருமயிலைக்
கற்பகமே உன்னருள் தாராய்
அனுபல்லவி
நிற்கதியாய் நிற்கும் அடிமை எந்தனுக்கு
நற்கதி நல்கிட நீ வாராய்
சரணம்
சிற்பர யோகியர் ஞானியர் போற்றும்
பொற்பதமே புகழ் அற்புதமே ...மயிலை..( கற்பகமே)
உன்னருள் இல்லையேல் என்னுயிர் நிலைக்குமோ
கேசவன் சோதரி திருமயிலை வளர்... (கற்பகமே)
இராகம் : சிந்துபைரவி தாளம் : ஆதி
No comments:
Post a Comment