பங்கஜவல்லியின்.....
பல்லவி
பங்கஜவல்லியின் பாதகமலங்தகளைத்
தஞ்சமடைந்தேன் சஞ்சலம் களைந்தேன்
அனுபல்லவி
திங்கள் பிறையணிந்த சங்கரன் துணைவி
அங்கயற்கண்ணி அபிராமவல்லி
சரணம்
தங்கம் வெள்ளியால் ஆபரணங்கள் பூண்டு
சிங்க வாகனம் கொண்டு சிவந்தநல் பட்டுடுத்தி
கங்காதரனைடனே புகழ் மிகு புரசையில்
மங்களமாய்க் குடி கொண்ட கேசவன் சோதரி
இராகம் : மத்யமாவதி தாளம் : ஆதி
No comments:
Post a Comment