குருவாயூரப்பன்.......
பல்லவி
குருவாயூரப்பன் திருவடி பணிந்தேன்
துரிதம்
கருணை வடிவான கலியுகவரதன்
நரர்சுரர் துதித்திடும் அரவிந்தபதத்தினன்
அனுபல்லவி
திருப்பாற்கடலுறை திரு நாராயணன்
துரிதம்
அருள் தரும் கண்ணன் தேவகி மைந்தன்
கம்சனைக் காய்ந்த ஶ்ரீவாசுதேவன்
சரணம்
தருமம் தழைக்கும் குருவாயூர் தலத்தில்
திருவிளையாடல் பல செய்து களித்த
கருணாமூர்த்தி கேசவன் அவனது
அருளைப் பெற விரும்பியே அடியேன்
இராகம் : ராகவசந்த( 14ல் ஜன்யம்) தாளம்:ஆதி
ஆரோகணம் : ஸரிம்பநிதஸ்
அவரோகணம்: ஸ்நிதம்பமகரிஸ
No comments:
Post a Comment