அருணாசலமே.......
பல்லவி
அருணாசலமே எனையாண்ட சிவமே
அன்பின் பொருளாகி நிற்கும் சிவமே
அனுபல்லவி
ஒருநாளும் உனை நான் மறவேன் சிவமே
பிரமனும் கேசவனும் தேடிய சிவமே
சரணம்
எளிதாக எல்லோர்க்கும் அருளும் சிவமே
உலகமனைத்திலும் நிறைந்த சிவமே
அடியார் மனத்தினுள் அமர்ந்த சிவமே
இசையால் தமிழால் யான் பாடும் சிவமே
ஒளியாகி வெளியாகி காற்றாகி சிவமே
நிலமாகி நீராகி நின்றாடும் சிவமே
ஊனாகி எனக்குள்ளே உயிராகி சிவமே
தேனாகித் தித்திக்கும் ஓங்கார சிவமே
இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஆதி
No comments:
Post a Comment