வான்மியூர் சுந்தரி......
பல்லவி
வான்மியூர் சுந்தரி வந்தெனக்கருள்புரி - திரு
வான்மியூர் சுந்தரி வந்தெனக்கருள்புரி
வானவர் தானவர் தேனுவும் வணங்கிடும்
அனுபல்லவி
தானெனும் அகந்தையால் நான் படுந்துயரம்
வான் புகழ் கேசவன் சோதரி தீர்த்தருள்
சரணம்
நான் மறையேதும் நானறிந்தவனில்லை
நல்லதும் தீயதும் தெரிந்தவனில்லை
தேனெனும் மருந்தீச்வரன்துணை என் துணை
நீயென நினைந்துன் மலரடி பணிந்தேன்
இராகம் : சாமா தாளம் : ஆதி
No comments:
Post a Comment