சங்கராபரணமே.......
பல்லவி
சங்கரன் ஆபரணமே...........
சங்கராபரணமே சங்கரி உன்றன்
பங்கய மலர்ப்பதம் மகிழ்வுடன் பணிந்தேன்
அனுபல்லவி
மங்காத புகழ் மிகு ஏகாம்ரேச்வரர்
மங்களமாய்ப் போற்றும் ஶ்ரீ காஞ்சி காமாக்ஷி
சரணம்
திங்களும் கங்கையும் சடையினில் ஏந்திய
சங்கரர் இடப்புறம் அமர்ந்திருப்பவளே
மங்கல குங்குமம் நெற்றியில் அணிந்த
அங்கயற்கண்ணி கேசவன் சோதரி
இராகம் : சங்கராபரணம் தாளம் : ஆதி
No comments:
Post a Comment