மங்களாம்பிகையின்......
பல்லவி
மங்களாம்பிகையின் மலர்த்தாள் பணிந்தேன்
பொங்கும் எழில் கொஞ்சும் வையச்சேரி வளர்
அனுபல்லவி
மங்களம் தரும் மகாதிரிபுரசுந்தரி
அருள் தரும் அகச்தீச்வரர் மகிழ் சங்கரி
சரணம்
சங்கத்தமிழ் போற்றும் அவ்கயற்கண்ணி
. சங்கரர் துதித்திடும் ஶ்ரீகாஞ்சி காமாக்ஷி
கங்கை விளையாடும் காசி விசாலாக்ஷி
எங்கும் நிறைந்திருக்கும் கேசவன் சோதரி
இராகம் : மத்யமாவதி தாளம் : ஆதி
No comments:
Post a Comment