ஓராயிரம் ......
பல்லவி
ஓராயிரம் நாமம் சொல்லியழைத்தாலும்
பாராமுகம் ஏனோ சென்ன கேசவா
அனுபல்லவி
ஆராவமுதனே திருக்குடந்தை அருட்கடலே
சாரங்கபாணியுனைச் சரணடைந்தேன்
சரணம்
சேராத இடம் சேர்ந்து சிறுமதியால் தவறு செய்தேன்
தீராவினைப் பயனால் திண்டாடியலைந்தேன்
நாராயணனே உனதருளால் மனம் திருந்தி
சீரான வாழ்வு பெற உனதடிமை உனைப் பணிந்து
இராகம்:தைர்யமுகி ( 9ல் ஜன்யம்) தாளம்: ஆதி
No comments:
Post a Comment