வா வா நீலவண்ணா.......
பல்லவி
வா வா நீலவண்ணா வா என்னைக்காக்க வா
அனுபல்லவி
தேவாதி தேவா வா திருத்தங்கும் மணிமார்பா
மூவாசைப் பிணி போக்க வா கேசவா
சரணம்
நாவாரத் துதித்திடும் அடியவர் துயர் நீக்க
ஏவாமலே வரும் மாதவா வா
ஆவினங்கள் மேய்க்கும் ஆயர்குல விளக்கே வா
நன்மங்கலம் வளர் வாசு தேவா வா
இராகம் : பாலசந்த்ரா( 72ல் ஜன்யம்)தாளம்:ஆதி
No comments:
Post a Comment