மகிஷாசுரமர்த்தினி ......
பல்லவி
மகிஷாசுரமர்த்தினி மலர்ப்பதம் பணிந்தேன்
அரக்கன் மகிடனை மாய்த்த அன்னையே ...ஶ்ரீ
அனுபல்லவி
மகா காளிதேவி பாகவதம் போற்றும்
ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரி
சரணம்
மகாலக்ஷ்மி சரஸ்வதி நீயே
மகாதேவன் பிரமன் பணிந்திடும்
மகாதேவி கேசவன் சோதரி
மகிதலம் போற்றும் நவராத்திரி நாயகி
துரிதம்
சுகசனகாதியர் இந்திரனும் தேவரும்
சந்திரன் சூரியன் திசைகளும் துதித்திடும்
இராகம் : தேவகுஞ்சரி தாளம் : ஆதி
No comments:
Post a Comment