சங்கடம்.......
பல்லவி
சங்கடம் களைந்திடும் மங்களாம்பிகையின்
பங்கய மலர்ப் பதம் அனுதினம் பணிந்தேன்
அனுபல்லவி
திங்கள் திருமுகம் மங்கள வதனம்
பொங்கும் அருள் தரும் பொலிவுடன் திகழும்
சரணம்
மங்காத புகழ்மிகு அகஸ்தீஸ்வரருடன்
அங்காரகன் மற்றும் கிரகங்களும் வணங்கிட
சிங்காரமாய் வையச்சேரியில் வீற்றிருந்து
எங்களைக் காக்கும் கேசவன் சோதரி
இராகம் : ஹிந்தோளம் தாளம் : ஆதி
No comments:
Post a Comment