பிறையணி உமையாள்.......
பல்லவி
பிறையணி உமையாள் மலர்த்தாள் பணிந்தேன்
கறைபிறவிப் பிணி தீர்க்கும் நாகேச்வரர் போற்றும்
அனுபல்லவி
குறைகளைக் களைந்து களைபெற விரும்பி
கார்த்திகை மாதம் பௌர்ணமி திங்களில்
துரிதம்
இறைமகள் மீது தன் கலை வீசி
தண்மதி பணிந்திடும் சண்பகவனத்தமர்
சரணம்
அரைகுறைப் புலமையால் அறிந்ததை நான் பாடி
இறைவனும் மயங்கிடும் இசை வளம் வேண்டினேன்
மறைபுகழ் மாயே நிறைந்தவள் நீயே
விரைந்தெனக்கருள்வாய் கேசவன் சோதரி
இராகம் : கல்யாணி தாளம் : ஆதி
No comments:
Post a Comment