மலர்ப்பதம்........
பல்லவி
மலர்ப் பதம் பணிந்தேன் காமாக்ஷியுன்
மகவெனக் கபயம் அளித்திடல் வேண்டியே
அனுபல்லவி
தலங்களில் சிறந்த காஞ்சீபுரம்தனில்
நிலமெனத் திகழும் ஈசன் போற்றும்
சரணம்
கலைமகள் மலைமகள் அலைமகள் ஆகிய
நலம் தரும் தேவியர் மூவரும் நீயே
வலம் வரும் அடியவர் குலம் தழைக்க நற்
பலன்களை அருளும் கேசவன் சோதரி
இராகம் : வனஸ்பதி தாளம்: ஆதி
No comments:
Post a Comment