தாயே பிரமராம்பிகே.....
பல்லவி
தாயே பிரமராம்பிகே தஞ்சமடைந்தேன்
நீயே என் துணை சேயெனை ஆண்டருள்
அனுபல்லவி
ஓயாதுனைத் தொழும் பக்தருக்கெல்லாம்
நீயாகவே கருணை புரிந்திடும் கருணாகரி
சரணம்
தாயினும் பரிவோடு தயவளிக்கும் எம்பெருமான்
மல்லீச்வரன் போற்றும் சாமகானப்ரியே
தேயாத புகழ் மேவும் தென்சென்னைப் பதியமர்ந்த
மாயே மரகதமே கேசவன் சோதரி
இராகம் :ஶ்ரீராகம் தாளம் : கண்டசாபு
No comments:
Post a Comment