எத்தனை......
பல்லவி
எத்தனை துன்பம் நீ எனக்களித்தாலும்
உத்தமனே கேசவா உனை நான் மறவேன்
அனுபல்லவி
நித்தமும் உனதிரு திருவடி பணிந்தேன்
சித்தத்தில் இருத்தி உனையே துதித்தேன்
சரணம்
கத்தும் கடல் நடுவே பள்ளி கொண்டிருக்கும்
வித்தகனே விமலா வேத தத்துவனே
இத்தரையில் வினைப்பயனால் யான்படும் துயர்நீங்க
ஒத்தாசை புரிந்திட உனை வேண்டி நின்றேன்
இராகம் : சோகவராளி ( 9ல் ஜன்யம்) தாளம்: ஆதி
No comments:
Post a Comment