உனையன்றி......
பல்லவி
உனையன்றி எனக்கொரு துணை உலகில் யாருளார்
நினைந்துருகிக் கண்ணனே உன் பதம் பணிந்தேன்
அனுபல்லவி
வினைப்பயன்கள் யாவும் களைந்தருள வேண்டுமென
முனைந்துனையே வேண்டினேன் நன்மங்கலத்துறைபவனே
சரணம்
தினையளவுன் திருநாமம் சொன்னாலும் போதும்
பனையளவு கருணையுடன் பயன்கள் தருபவனே
அனைத்துலகும் முனிவர்களும் கடவுளரும் போற்றும்
எனையாண்ட கேசவனே கருநீலவண்ணனே
இராகம் : பவானி ( 44 வது மேளத்தில் ஜன்யம்)
No comments:
Post a Comment