தாயே தயைபுரிவாயே......
பல்லவி
தாயே தயைபுரிவாயே தயாநிதியே
திருமுல்லைவாயில் வைஷ்ணவி நீயேயென்
அனுபல்லவி
தாயே உன்னருள் தரவில்லையாகில்
நாயேனுக்கிவ்வுலகில் வேறு புகல் ஏது
சரணம்
நோய் தீர்க்கும் மருந்தே நோயளிக்கலாகுமோ
தாயே தன் மகவை வெறுத்தொதுக்கலாமோ
சேய் செய்யும் பிழை பொறுத்தல் தாயுள்ளமல்லவோ
மாயே மகனெனையே மன்னித்தருள்வாயே
இராகம் : பைரவி தாளம் : சாபு
No comments:
Post a Comment