ஆசைகொண்டாயோ......
பல்லவி
ஆசைகொண்டாயோ கேசவா
மூவாசை கொண்டாயோ கேசவா
அனுபல்லவி
ஓசையின்றி உன்றன் பக்தரெல்லாம்
நேசம் கொண்டு மௌனம் சாதித்தார்
சரணம்
மண் வேண்டி மாபலியை ஆட்கொண்டாய்
பெண் வேண்டி ராதையின் பின் சென்றாய்
பொன்னும் பொருளும் வேண்டி நீ நின்றாய்
கண்குளிரத் திருப்பதியில் சுசரித்திரனே ஶ்ரீநிவாசா
இராகம் : சுசரித்ரா தாளம் : ஆதி
No comments:
Post a Comment