என்னைக் கவர்ந்தாயே....
பல்லவி
என்னைக் கவர்ந்தாயே என் தாயே ஈச்வரியே
சென்னை நகர் வளர் பிரமராம்பிகை நீயே
அனுபல்லவி
கண் படைத்த பயனை நானடைந்தேனே
கலி தீர்த்தென்னை ஆண்டருள்வாயே
சரணம்
மண்ணுலக மாந்தர்களும் மல்லீச்வரரும் போற்றும்
விண்ணுலகத்திந்திரரும் வானவரும் தொழுதேத்தும்
துரிதம்
பெண்ணுருவாய்ப் பேரொளியாய்
தண்மதியாய்த் தாரகையாய்க் காட்சி தந்தாயே
உன்னை மறவா மனம் தருவாயே
சென்ன கேசவன் சோதரி மாயே
இராகம் : விஜய நாகரி தாளம் : ஆதி
No comments:
Post a Comment