பத்மாவதியின்......
பல்லவி
பத்மாவதியின் பாதம் பணிந்தேன்
பத்மாசனம் தனில் வீற்றிருக்குமன்னை
அனுபல்லவி
உத்தமன் ஶ்ரீநிவாசனும் பிரமனும்
தட்சிணாமூர்த்தியும் துதித்துப் போற்றும்
சரணம்
நித்தியம் நிலைத்திடும் செல்வமும் புகழும்
சித்தத்தில் ஞானமும் மகிழ்ச்சியும் நலகிடும்
உத்தமி சென்ன கேசவன் பத்தினி
பக்தருக்கருள் தர கோமந்தகப் பதி வளர்
இராகம் : சாலகபைரவி தாளம்: ஆதி