வா வா வேலவா….
பல்லவி
வா வா வேலவா வா
என்னோடு விளையாட வா நீ வா
அனுபல்லவி
மாவாய் பிளந்த கேசவன் மருகா வா
மூவாசைப்பிணி போக்கும் முத்துக்குமரா வா
சரணம்
தேவாதி தேவனே நீ வா
தேவானை வள்ளி மணாளனே வா
சேவற்கொடியோனே வா
பாவாணர் பாடிப் பரவும் அறுமுகனே வா
பூவிலமர் திருமகளின் மருகோனே வா
தேவி பார்வதியின் திருமகனே வா
தேவர் முனிவர் பணி வேலாயுதனே வா
சேவிக்குமடியார் குறைதீர்க்கும் குகனே வா
பாவங்கள் தீர்க்கும் பரம்பொருளே வா
நாவல் பழம் தந்த பாலனே வா
கூவியழைத்தாலோடி வரும் குமரனே வா
ஆவலுடன் காத்திருக்கும் எனைக்காக்க வா
கோவமுடன் சென்று பழனி மலையமர்ந்த
தேவ சேனாபதியே வா
மாவிடை வாகனன் மகனே வா
பூவுலகோர் போற்றும் கந்தா வா
No comments:
Post a Comment