வெண்ணிலவின்……
பல்லவி
வெண்ணிலவின் பிறையணிந்த தாமரை முகத்தாளை
முண்டக க்கண்ணியை மயிலையில் துதித்தேன்
அனுபல்லவி
பண்டனை வதைத்த கேசவன் சோதரியை
கண்டவர் மனம் களிக்கச் செய்திடும் ஈச்வரியை
சரணம்
அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்தவளை
விண்ணுலகத்திந்திரனும் மண்ணுலக மாந்தரும்
கண்மூன்றுடையவனும் மாலயனும் முனிவர்களும்
தண்டனிட்டுப் பணிந்தேத்தும் அகிலாண்டேச்வரியை
No comments:
Post a Comment