காளி மகமாயி…..
பல்லவி
காளி மகமாயி நீலி திரிசூலி
தாளினைப் பணிந்தேன் காத்தருள்வாயே
அனுபல்லவி
வாளும் திரிசூலமுமேந்திடும் தாயே
நாளுமுன் நாமமே போற்றித் துதித்தேன்
சரணம்
மாளச்செய்து மகிடனை மாய்த்தவளே
கோள் களும் பணிந்திடும் கேசவன் சோதரி
நீள் கழல் காட்டிடும் சிவபெருமான் நாயகியே
ஆள வேண்டுமெனை வெற்றியூர் உமையே
காமாக்ஷி மீனாக்ஷி காசி விசாலாக்ஷி
மாமறைகள் போற்றும் ஆதி பராசக்தி
கமனுக்கருள் செய்த ஏகாம்ரேச்வரி
கோமதி சங்கரி அனைத்தும் நீயே
No comments:
Post a Comment