பாலாம்பிகே…….
பல்லவி
பலாம்பிகே சரணம் மலர்த்தாள் சரணம்
கோலாகலமாக மாமேருதனிலமர்ந்த
அனுபல்லவி
ஆலாலகண்டனும் அயனும் கேசவனும்
மேலோக பூலோகத்தனைவரும் பணிந்தேத்தும்
சரணம்
வாலைக்குமரியே வடிவான பேரழகே
மாலைகள் முத்தும் பவளமும் வைரமும்
நூலிடையில் தங்க மேகலையுமணிந்தவளே
மூலப்பொருளே முகுந்தனுக்கிளைவளே
நான்மறை போற்றும் மங்கல நாயகியே
வானவர் தானவர் வணங்கிடும் திருவுருவே
மோனத்தவம் செய்யும் முனிவரும் பணிந்திடும்
ஞானச்சுடரே சோதிவடிவானவளே
வித விதமாய் அணிமணிகள் அணிந்த இளம்பிறையே
விடமுண்ட கண்டன் மனங்கவர் மரகதமே
வேம்பு வனத்துறை ஈசனிடமமர்ந்தவளே
விசித்திர கிரீடமணிந்த பொற்கொடியே
நூதன நூபுரங்கள் இசையொலிக்க நடனமிடும்
பாதங்களுடையவளே அன்னை பராசக்தியே
வேதனை வினை தீர்க்கும் வைத்திய நாதன்
மாதருபாகன் மனங்கவர் தையல்நாயகியே
மாலயனிந்திரன் சூரியன் சந்திரன்
காலனும் வணங்கிடும் பாலே சுசீலே
ஞாலத்தோர் கற்பனைக்கெட்டாத பேரொளியே
ஏலவார்குழலியே மாயே மரகதே.
No comments:
Post a Comment