பாசா'ங்குசே'க்ஷு கார்முக
பஞ்சஸும பாணஹஸ்தே
தேச கால வஸ்து ரூப
திவ்யசக்ர மத்யஸ்தே ||
ஈசாநன் முதலாய ஐவர் தாங்கும் சிவாகார மஞ்சத்தில், சிவகாமேச்வரரின் இடப்பாகத்தில் அமர்ந்திருப்பவளான (லலிதா மஹா
த்ரிபுர ஸுந்தரி எனப்படும் லலிதா மஹா பட்டரிகாவான) உனக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள். திருவும், வாணியும் இரு பக்கமும் இருந்து சேவை புரியும்,
ச்ருங்காரக் கலையின் உருவகமே!
ச்யாமளா தேவியாலும், பகளா தேவியாலும் வணங்கப்
படுபவளே! துராசைகளை அகற்றும் திறமை மிக்க சரணாரவிந்தங்களைக்
கொண்டவளே! திருமாலாலும் குருகுஹனாலும் பூஜிக்கப்பட்ட பரிபூர்ண கலாசொருபியே !
எல்லாக் கலைகளுமானவளே! பாசக்கயிறு, அங்குசம், கரும்பு வில், ஐந்து மலரம்புகள்
ஆகியவற்றைக் கரங்களில் தாங்கியவளே! தேசம், காலம், வஸ்து, ரூபமாய் நிரம்பியவளே!
(மிக உயர்ந்ததான) ஸ்ரீசக்ரத்தின் மத்தியில் கோயில் கொண்டுள்ளவளே! உனக்கு மீண்டும்
மீண்டும் நமஸ்காரங்கள்.
திருச்சக்கரத்தின்…
பல்லவி
திருச்சக்கரத்தின் நடுவிலிருப்பவளே
திரிபுர சுந்தரியே உனையே துதித்தேன்
அனுபல்லவி
திருமகள் கலைமகள் இருபுறமிருந்து
பணிவிடை புரிந்திடும் பாக்கியமுடையவளே
சரணம்
திருமால் கேசவனும் குருகுகனும் பணிந்திடும்
பெருமைக்குரியவளே சகலகலைமாதே
ஈசனன் முதல் ஐவர் தாங்கிடும்
ஆசனத்தில் வீற்றிருக்கும் சிவாமேச்வரியே
கரும்பு வில்லும் அஞ்சுமலரம்பும்
பாசாங்குசமும் கரங்களிலேந்திடும்
தேச கால வஸ்து வடிவானவளே
வாச மலர் தூவி மீண்டும் பணிந்தேன்
No comments:
Post a Comment