அன்னபூர்ணா ஸ்தவம்...
1. நம: கல்யாணதே தேவி நம: சங்கரவல்லபே
நமோ பக்திப்ரதே தேவி அந்தபூர்ணே நமோஸ்துதே
பொருள் : மங்களத்தைக் கொடுப்பவளும், மங்களத்தைச் செய்கிற பரமசிவனுடைய நாயகியும், அன்பர்களுக்குப் பக்தியை வழங்குபவளும், எங்கும் எந்தப் பொருளிலும் ஒளியுடன் ஒளிர்பவளுமாகிய அன்னபூர்ணாதேவியே, உனக்கு நமஸ்காரம்.
2. நமோ மாயாக்ருஹீதாங்கி நம: சோகவிநாசினி
மஹேச்வரி நமஸ் துப்யமந்நபூர்ணே நமோஸ்து தே
பொருள் : மாயையின் வடிவமாக உள்ள திருமேனியை யுடையவளே! பக்தர்களின் துன்பத்தைக் களைபவளே! மகேசனின் மனைவியாக இருப்பவளே, அன்னபூரணியே, உனக்கு நமஸ்காரம்.
3. மஹாமாயே சிவதர்மபத்நிரூபே நமோஸ்து தே
வாஞ்சாதாத்ரி ஸுரேசாநி சாந்தபூர்ணே நமோஸ்து தே
மகாமாயையின் வடிவமாக அமைந்தவளும், பரமசிவனுடைய தர்மத்துக்குத் துணைவியாக இருப்பவளும், அன்ரவர்கள் விரும்பியதை வரையாமல் கொடுப்பவளும், தேவர்களுக்கெல்லாம் தலைவியாக இருப்பவளுமான அன்னபூர்ணா தேவியே, உனக்கு நமஸ்காரம்.
4. உத்யத்பாநுஸஹஸ்ரேண நயநத்ரயசோபிதே!
சந்த்ரசூடே மகாதேவி அந்நபூர்ண நமோஸ்து தே
பொருள் : ஆயிரக்கணக்கான சூரியன்கள் உதிப்பதற்கு நிகரான மூன்று கண்களோடு பிரகாசிப்பவளும், பாதி சந்திரனைத் தலையில் அணிந்தவளும், பெருகிய ஒளியையுடையவளுமான அன்னபூர்ணா தேவியே, உனக்கு நமஸ்காரம்.
5. விசித்ரவஸநே தேவி அந்நதாநரதேநகே
சிவந்ருத்ய க்ருதாமோதே அந்நபூர்ணே நமோஸ்து தே
பொருள் : பல நிறங்கள் கொண்ட ஆடை அணிந்தவளும், ஒளி மயமாகத் திகழ்பவளும், அன்னதானம் செய்வதிலேயே திளைத்திருப்பவளும், மாசற்றவளும், பரமசிவனுடைய சந்தியா தாண்டவத்தைக் கண்டு மகிழ்ச்சியடைபவளுமான அன்னபூர்ணா தேவியே, உனக்கு நமஸ்காரம்.
6. ஸாதகாபீஷ்டதே தேவி பவதுக்கவிநாசிநி
குசபாரநதே தேவி அந்நபூர்ணே நமோஸ்து எதே
பொருள் : உபாசகனுக்கு விரும்பியதை வரையாமல் கொடுப்பவளும், ஒளிமிக்கவளும், பிறவித் துன்பத்தைத் துளைப் பவளும் எங்கும் பரவிய ஒளியுடன் பிரகாசிப்பவளுமான அன்ன பூர்ணாதேவியே உனக்கு நமஸ்காரம்.
7. ஷட்கோணபத்மமத்யஸ்தே ஷடங்கத்யுதிகோமளே
ப்ரஹ்மாண்யாதிஸ்வரூபே ச அந்தபூர்ணே நமோஸ்து தே
பொருள் : ஆறு கோணங்கள் கொண்ட தாமரை வடிவமாக உள்ள யந்திரத்தின் நடுவில் அமர்ந்தவளும், ஆறு அங்கங்களின் ஒளியினால் அழகாக இருப்பவளும், ப்ரஹ்மாணீ முதலிய தேவதைகளின் வடிவமாக அமைந்தவளுமான அன்னபூர்ணா தேவியே உனக்கு நமஸ்காரம்.
8. தேவி சந்த்ரக்ருதாபீடே ஸர்வஸாம்ராஜ்யதாயிநி
ஸ்ர்வாநந்தகரே தேவி அந்நபூர்ணே நமோஸ்து தே
பொருள் : ஒளி பொருந்திய, பாதி சந்திரனை அலங்காரமாக அணிந்திருப்பவளும், பெருகிய சாம்ராஜ்யத்தை அளிப்பவளும், பெருகிய ஆனந்தத்தை அடையச் செய்பவளும் அன்னையுமான அன்னபூர்ணாதேவியே உனக்கு நமஸ்காரம்.
9. இந்த்ராத்யர்ச்சிதபாதாப்ஜே ருத்ராதே ரூபதாரிணி
ஸர்வஸம்பத்ப்ரதே தேவி அந்நபூர்ணே நமோஸ்து தே
பொருள் : இந்திரன் முதலிய தேவர்களால் அர்ச்சிக்கப் பெற்ற தாமரை போன்ற திருவடிகளை உடையவளும், ருத்திரன் முதலியவர்களின் வடிவத்தைத் தாங்கியவளும், எல்லா வகையான செல்வங்களையும் குறையாமல் கொடுப்பவளும், ஒளி பொருந்தியவளும் அன்னையுமான அன்னபூர்ணாதேவியே, உனக்கு நமஸ்காரம்.
பலச்ருதி:
10. பூஜாகாலே படேத் யஸ்து ஸ்தோத்ரமேதத் ஸமாஹித
தஸ்ய கேஹே ஸ்திரா லக்ஷ்மீர் ஜாயதே நாத்ரஸம்சய
பொருள் : எவன் ஒருவன் பூஜை செய்யும்போது இந்தத் துதியை நிலைத்த மனதுடன் படித்து வருகிறானோ, அவனுடைய வீட்டில் செல்வம் (ஐஸ்வர்யம்) உண்டாகி நிலைபெற்றிருக்கும். இதில் சந்தேகமே இல்லை.
11. ப்ராத: காலே படேத் யஸ்து மந்த்ரஜாபபுர: ஸரம்
தஸ்யாந்தஸம்ருத்திச்ச ஸ்யாத் வர்தமாநா திநேதிநே
பொருள் : எவன் ஒருவன் காலை வேளையில் மந்திரஜபம் செய்துகொண்டு அன்னையின் முன்னிலையில் இந்தத் துதியைப் படித்து வருகிறானோ, அவனுக்கு ஒவ்வொரு நாளும் அன்னத்தினுடைய நிறைவும் உண்டாகிறது.
அன்னபூரணி…..
பல்லவி
அன்னபூரணி உன்னடி பணிந்தேன்
இன்னருள் தந்தெனைக் காத்தருள்வாயே
அனுபல்லவி
பன்னக சயனன் கேசவன் சோதரி
நன்னலம் தந்திடும் பன்னக பூஷணி
சரணங்கள்
மங்களம் தந்திடும் சங்கரன் பங்கிலுறை
மங்களாம்பிகே சங்கரி கௌரி
எங்கும் நிறைந்தவளே ஏகாம்ப்ரேச்வரி
பங்கய பதம் பணிந்தேன் சிவகாமேச்வரி
மாயையின் தூய வடிவானவளே
ஓயாது துதித்திடுமடியாரைக்காப்பவளே
தீயை நெற்றிக் கண்ணாக வைத்திருப்பவளே
மாயே மரகதமே மகேசன் துணைவியே
மகாதேவனின் மனங்கவர் ராணியே
மகாமாயையே மதியின் பிறையணிந்தவளே
சுகானுபவம் வரம் துதிப்பவர்க்கருள்பவளே
அகால மரணமணுகாமல் காப்பவளே
உதிக்கின்ற ஓராயிரம் கதிரொளி போலிருப்பளே
மதி நுதலுடையவளே மரகத நிறத்தவளே
விதியையும் மாற்றும் வல்லமையுடையவளே
கதிநீயே தாயே முக்கணியே உமையே
வண்ணப் பட்டாடைகள் பல அணிந்தவளே
கண்ணாயிரமுடையவளே கருணைக் கடலே
அன்னதானத்தில் மகிழ்ச்சியடைபவளே
பன்னகாபரணனின் நடனத்தை ரசிப்பவளே
எங்கும் ஒளிதரும் கண்கவரழகியே
பொங்கரவுக்குடையணி்ந்த தேவி கருமாரியே
சிங்கவானம் தனில் சஞ்சரிப்பவளே
அங்கயற்கண்ணியே அகிலாண்டேச்வரியே
அறு கோணத்தாமரையின் நடுவமர்ந்திருப்பளே
அறுவித அங்கங்களின் அழகுடன் திகழ்பவளே
அறுமுகன் அன்னையே ஆனந்தமயமானவளே
அறிவுக்கடவுளே அருமறைப்பொருளே
திங்கள் திருமுகத்தாளே திருவென்னும் பெயராளே
கங்காதரன் சகியே சங்கடம் களைபவளே
மங்காத புகழ் மேவும் நல்வாழ்வு தருபவளே
அய்ங்கரனைப் படைதவளே அனங்கனைக் காத்தவளே
இந்திரனும் தேவர்களும் சந்திரனும் சூரியனும்
நந்தியும் கணங்களும் சுகசனகாதியரும்
கந்தன் கணபதி அரனயனரியும்
சந்ததம் பணிந்தேத்தும் திரிபுரசுந்தரியே
No comments:
Post a Comment