Sunday, 28 November 2021

யாழைப் பழித்த…..

 பசுபதியான சிவபெருமான் புகழ் பாடினால் அம்பிகைக்கு அலாதி ப்ரியம்....கருணையே பராசக்தி.

#யாழைப்பழித்த நன்மொழியம்மை...

அம்பிகையின் இந்தத் திருநாமம் வடமொழியில் வீணா மதுரபாஷிணி என்று வழங்கப்படுகின்றது. இந்த பெயர் வந்ததற்கான காரணம், ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியில் ஒரு சுவையான சம்பவமாக சொல்லப்படுகின்றது. ✨ தேவிக்கு, சிவபிரானின் புகழை மற்றவர்கள் சொல்வதைக் கேட்க மிகவும் விருப்பம். ஒரு நாள், சரஸ்வதி, சிவபிரானின் பலவித திருவிளையாடல்களை  பாடலாக தனது வீணையில்  மீட்டிக்கொண்டு பாடி  இருந்தபோது, அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் செவியுற்ற பார்வதி தேவி, ஸாது ஸாது (பிரமாதம், பிரமாதம்) என்று கூறினார். தேவியின் மதுரமான சொற்களைக் கேட்ட சரஸ்வதி, தான் வீணையில் மீட்டிய நாதம்,  தேவியின் குரல் இனிமைக்கு முன்னால் எடுபடாது என்பதை உணர்ந்து, மிகவும் வெட்கத்துடன், தனது வாசிப்பினை நிறுத்தி, வீணையை உறையில்இட்டு மூடியதாக சௌந்தர்ய லஹரியில் இந்த பாடலில் கூறப்படுகின்றது...

🌺விபஞ்ச்யா காயந்தீ விவிதம் அபிதானம் பசுபதே:  

த்வயாரப்தே வக்தும் சலித சிரசா சாது வசனே 

ததீயைர் மாதுர்யைர் அபலபித தந்த்ரீ கலரவாம் 

நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம்🌺

 விபஞ்ச்யா=விபஞ்சீ என்பது சரஸ்வதியின் வீணையின் பெயர் (இதை சொல்லிட்டு குறித்ததால் இது சரஸ்வதியால் வாசிக்கப்படுகிறது என்று உணரவும்); காயந்தீ =பாடுதல்; விவிதம்=பலவகைப்பட்ட; அபிதானம்=திருவிளையாடல்கள்; பசுபதே=சிவபிரானின்; த்வயா=உனது ; ஆரப்தே= தலை அசைப்பினால்; வக்தும்=சொல்வதற்கு; சலித=ஆட்டுதல்; சிரசு=தலை; சாது வசனே= பாராட்டும் சொல்; ததீயை=அதனுடைய; மாதுர்யை=இனிமையால்: அபலபித தந்த்ரீ=தந்திகளில் இருந்து எழுந்த அழகிய ஒலி: கலரவாம்=அவமதிப்பு அடைந்ததைக் கண்டு; நிஜாம்=தன்னுடைய; வீணாம்=வீணையினை; நிசுலயதி=மூடுதல்; சோலேன=உறையினால்; நிப்ருதம்=வெளியில் தெரியாவண்ணம். ✨திருமறைக்காடு திருத்தலத்து அன்னையின் திருநாமம் யாழைப் பழித்த நன் மொழியம்மை ஆகும். ✨பொதுவாக நாம் சரஸ்வதியை வீணையுடன் காண்கிறோம் ஆனால் திருமறைக்காடு ஸ்தலத்தில் வீணை இன்றி காணலாம் - இது அம்பாளின்  இந்த லீலையோடும் இத்தலப் பெயரோடும்  ஒப்ப நோக்கத் தகுந்த வண்ணம் உள்ளது.


                                                   யாழைப் பழித்த…..


                                                          பல்லவி

                                           யாழைப் பழித்த நன்மொழியாளை

                                           ஏழையெனக்கருள வேண்டுமெனத் துதித்தேன்                                          

                                                         அனுபல்லவி                                       

                                          பேழை வயிரன் அன்னையை உமையை

                                          ஏழுமலையான் கேசவன் சோதரியை

                                                             சரணம்

                                          யாழினை மீட்டி ஈசன் பெருமைகளை

                                          பாடிய கலைமகளைப் பாராட்டி மலைமகள்

                                          வாழியெனச்சொன்ன மதுர மொழிகளே

                                          யாழினும் இனிதென அதை மூடச்செய்த                                  

                                           

                                           

No comments:

Post a Comment