ஶ்ரீ துர்கே……
பல்லவி
ஶ்ரீ துர்கே உன் பாதம் பணிந்தேன்
ஆதரவு நீயென்றே அடைக்கலம் தேடி
அனுபல்லவி
மா துர்கே மாயே கேசவன் சோதரி
சாதுர்யமானவளே சதுர் வேதமானவளே
சரணம்
யாதுமாகி நின்ற மாகாளி பைரவியே
பூதலத்தின் மாதாவே செல்வங்களின் அதிபதியே
தீதிலா வசுதேவர் ஈன்றெடுத்த நவநிதியே
ஏதமிலா இன்சொல் மரகதமே உனைத்துதித்தேன்
சாதித்த புண்ணியர் போற்றும் யோக மாயையே
ஆதியே அந்தமே சோதியே சுடரே
பாதி மதியணிந்த பரதேவியும் நீயே
மேதினியோர் போற்றுமுன் பதமலர் பணிந்தேன்
வேதங்களும் நீயே பரம்பொருளும் நீயே
சீதளா தேவியே மகிடனை மாய்த்தவளே
சங்கும் சக்கரமும் கதையும் கையிலேந்தி
மஞ்சள் பட்டாடை அணிந்தவளுனைப்ணிந்தேன்
எண் கரத்தாளே எளியோரைக் காப்பவளே
கண் கவர் பேரழகே காத்யாயனியே
அட்டமி நவமியை விரும்பும் ஆரணங்கே
உத்தமிய உன்னிரு திருவடி வணங்கினேன்
No comments:
Post a Comment