எனது தெய்வம்….
பல்லவி
எனது தெய்வம் நீயெனவே துதித்தேன்
உனதருள் தர இன்னும் தயக்கமேன் முருகா
அனுபல்லவி
அனங்கனைப் படைத்த கேசவன் மருகனே
தனக்கொரு நிகரில்லாத தனிப்பெருங்கடவுளே
சரணம்
வனக்குறமகளை மணந்த வடிவேலனே
கனகவேல் கந்தனே முத்துக்குமரனே
உனக்கிணை உலகில் வேறு யாருள்ளார்
சினத்துடன் மயிலேறிப் பழனியிலமர்ந்தவனே
முனைப்புடன் படைநடத்தி சூரனை வதைத்தனே
சனகாதி முனிவர்களும் சுரபதியும் தேவர்களும்
தினம் பணிந்தேத்தும் கலியுக க்கடவுளே
வினைப்பயன் களைந்தெனை ஆண்டருள வேண்டினேன்
No comments:
Post a Comment