என்னை மறந்தாயோ..
பல்லவி
என்னை மறந்தாயோ என் தாயே ஈச்வரியே
சென்ன கேசவன் சோதரியே மாயே
அனுபல்லவி
உன்னையன்றி வேறோர் தெய்வம் நானறியேன்
பன்னகாபரணன் மனங்கவர்ந்த நாயகியே
சரணம்
முன்னைப் பழம் பொருளே மூவருக்கும் மூத்தவளே
பொன் மழை பொழிந்தவளே புவனம் தனைக் காப்பவளே
அன்னபூரணியே அகிலாண்டேச்வரியே
முன் வினைப்பயன் நீக்கி என்னை ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment