சுற்றாத ஊர்கள், முழுகாத தீர்த்தம்
துதியாத மூர்த்தி இலையே!
மற்றேது சொல்ல மனவேத னைகள்
மாறாது நொந்த நிலையே! சிற்றாடை வல்லி பிறர்பால் இரந்து
செல்லாத வண்ணம் அருளே! சிவனார்தம் பாகம் பிரியாது வாழும்
திருவெற்றி யூரில் உமையே! 24
சுற்றித்திரியாத……
பல்லவி
சுற்றித்திரியாத திருத்தலங்களில்லை
பற்றித் துதிக்காத திருவடிகளில்லை
அனுபல்லவி
சிற்றாடை வல்லி கேசவன்சோதரி
மற்றெதுவும் சொன்னாலும் வேதனையே மிஞ்சும்
சரணம்
மற்றொருவரிடமிரந்து செல்லாத நிலையருள்வாய்
சுற்றமென ஈசனவன் பங்கிலுறைபவளே
வெற்றியூர் தலத்துறையும் பாகம் பிரியாளே
உற்ற துணை உனயன்றி வேறொருவரில்லை
No comments:
Post a Comment