கருணை விழிகளால்….
பல்லவி
கருணை விழிகளால் எனைக்கவர்ந்த
கருணா மூர்த்தியே மணிகண்டனே
அனுபல்லவி
தரும சாஸ்தாவே தாமரைப் பாதனே
திருமால் கேசவன் சிவன் மகனே
சரணம்
இருள்சூழென் மனம் ஒளிபெறவே உன்
திருவடி பணிந்தேன் கலியுகவரதனே
இருமுடி தங்கியுன் திருமுகம் காணும்
திருநாள் வர நான் காத்திருந்தேன்
இருவினைப் பயன்கள் தொலைந்திடவே
குருபரனே எனக்கருள் புரிவாய்
வருமிடர் தீர்த்தெனை வாஞ்சையுடன்
அரவணைத்திடவே உன்னடி பணிந்தேன்
சரணம் சரணம் ஐயப்பா
சுவாமியே சரணம் ஐயப்பா
No comments:
Post a Comment