செங்கோல் பிடித்த உன்கோயில் வந்தும்
திறவாத தென்ன கதவே! எங்கோனும் நீயும் அல்லாமல் இந்த
எளியேனுக் கேது புகலே! சிங்காத னத்தில் உனைநாளும் கண்டு
செம்மாந்து பாட உதவே! சிவனார்தம் பாகம் பிரியாது வாழும்
திருவெற்றி யூரில் உமையே!
சிவனார்……
பல்லவி
சிவனார் பாகமுறை வெற்றியரன்னையே
கவனமுடன் துதித்திடும் எனைக்காத்தருள்வாயே
அனுபல்லவி
தவ யோகியர் மற்றும் அமரரும் பிரமனும்
புவனமனைத்தும் போற்றும் கேசவன் சோதரி
சரணம்
பங்கயமே உன் கோயில் வாசல் வந்து நின்றும்
அங்குன் திருக்கதவம் திறக்காத்ததேனோ
சங்கரனும் நீயுமின்றி வேறு புகல் எனக்கேது
மங்காத புகழுடன் சிங்காதனத்திலமர்
No comments:
Post a Comment