அணைத்துக் காப்பவளே! நீயே அக்னி, சந்திரன், ஸூரியன், வாயு, பூமி,நீர், ஆகாயம் இவற்றின் அந்தர்யாமியாக உள்ளிருப்பவள், பிரும்மா, விஷ்ணு, ஈசன், இந்திரன் முதலான தேவர்களிடமும் அஸுரர்களிடமும் ஆத்மாவாக இருப்பவள், படைக்கப்பெற்ற தாவரத்திலும் ஜங்கமத்திலும் உள்ளிருக்கிற உள்ளுணர்வாக இருப்பவள், இந்த சக்திபீஜத் தியானத்தால் முன் தோன்றுகிறாய்.
(ஸத்-சித்-ஆனந்தம் என்ற பிரும்ஹ நிலை அந்தர்யாமியாக, பேருணர்வாக, ஆனந்தமாக வெளிப்படுகிறது.) (13)
அனைத்தும் நீயே…..
பல்லவி
அனைத்தும் நீயே அணைத்தெனைக் காப்பவளே
உனையே துதித்தேன் கேசவன் சோதரி
அனுபல்லவி
வினைப் பயன் களைந்திட உனையன்றி யார் துணை
முனைப்புடன் துதித்திடுமடியார்க்கருள்பவளே
சரணம்
அசையும் பொருள் நீ அசையாப் பொருள் நீ
பஞ்ச பூதமும் நீ பஞ்சேந்திரியமும் நீ
அரனரியயனும் நரர்சுரரிந்திரனும்
பரம் பொருளும் நீயே பரதேவித் தாயே
No comments:
Post a Comment