ஶ்ரீ ராமா…..
பல்லவி
ஶ்ரீ ராமா எனையே காத்தருள்வாயே
பாரமா நானுனக்கு பரமனே கேசவா
அனுபல்லவி
ஓராயிரம் பெயருடைய நாராயணனே
ஆராவதே ஆதவ குலத்தோனே
சரணம்
சேரா இடம் சேர்ந்து நான் திரியவில்லை
யாரோடும் உறவாடி யார் குடியும் கெடுக்கவில்லை
பேராசை ப்பட்டு பெரும் பொருள் சேர்க்கவில்லை
ஊரார் பழிக்கும் செயலெதுவும் செய்யவில்லை
No comments:
Post a Comment