துன்பம் களைந்திட….
பல்லவி
துன்பம் களைந்திட உன்னைத் துதிப்பதன்றி
வேறோர் மார்க்கமில்லை
துரிதம்
அன்னையே பங்காரு காமாக்ஷி
இன்னருள் தந்தெனை ஆண்டருள்வாய்
அனுபல்லவி
பன்னக பூஷணன் பரமேச்வரன் பங்கிலுறை அன்னபூரணி
பன்னக சயனன் பத்மநாபன் கேசவன் சோதரி ஶ்ரீபுவனேச்வரி
சரணம்
அன்புடன் பணிந்திடும் பக்தருக்கெல்லம்
இன்பமளித்திடும் ஈச்வரி சங்கரி
கன்ம வினைப்யனனைத்தையும் களைந்திடும்
பரமகல்யாணி பர்வதவர்த்தனி
இராகம் : ஸாரங்க பௌளி, நாடகப்ரியாவில் ஜன்யம்.
ஆரோகணம்: ஸமகமபதநிஸ்
அவரோகணம்: ஸ்நிதபமகரிஸ
No comments:
Post a Comment