அன்னையும்…..
பல்லவி
அன்னையும் பிதாவும் நீயேயென்றெண்ணி
உன்னையே பணிந்தேன் ஆலங்காட்டரசே
அனுபல்லவி
பொன்னும் பொருளும் புகழும் யான் வேண்டேன்
உன்னருள் ஒன்றே என்றும் வேண்டினேன்
சரணம்
ஒன்றும் பலவும் நன்றும் தீதும்
அனைத்துமாகிய ஆலங்காட்டரசே
அன்று காரைக்காலம்மைக்கருள் தந்ததுபோல்
இன்று கேசவன் எனக்கருள வேண்டினேன்
இராகம்: ஹிமாங்கி
ஆரோ: ஸரிகம்பதநிதஸ்
அவ: ஸ்நிதபமகரிஸ
No comments:
Post a Comment