சிந்தை கவர்ந்திடும்….
பல்லவி
சிந்தை கவர்ந்திடும் சிவ பாலனே குமரா
கந்தனே உந்தனை வந்தனை புரிந்தேன்
அனுபல்லவி
தந்தைக்கு மந்திரம் ஓதிய குருபரனே
செந்தாமரைக் கண்ணன் கேசவன் மருகனே
சரணம்
நிந்தை புரிந்த சூரனுக்குமருள் தந்து
விந்தையாய் சேவலும் மயிலுமாய்ச் செய்தவனே
முந்தைய பழவினைப் பயன்களைக் களைந்தெனக்கும்
உன் தயை தந்தெனைக் காத்தருள வேண்டினேன்
சந்ததம் பணிந்திடுமடியார்க்கருள்பவனே
இந்திரன் மகளை மணந்த சுந்தரனே
பந்தள குமாரன் ஐயப்பன் சோதரனே
செந்தமிழ்க் கடவுளே சேவடி பணிந்தேன்
No comments:
Post a Comment