உன்னைத் துதிக்க….
பல்லவி
உன்னைத்துதிக்க மறந்தேன் முருகா
கன்னலே தேனே கார்த்திகேயனே
அனுபல்லவி
சென்ன கேசவன் மருகனே குமரா
பன்னக பூஷணன் பரமசிவன் மகனே
சரணம்
உன்னருளாலன்றோ உலகுயிரனைத்தும்
இன்னலின்றியே இனிதியங்குவது
சின்னஞ்சிறியேன் செய்த பிழை பொறுத்து
என்னை மன்னித்து ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment