நாமமுரைப்பதே…..
பல்லவி
நாம முரைப்பதே நமக்கானந்தம்
காமனைப் படைத்த ஶ்ரீ ராமா உனது
அனுபல்லவி
மாமறைகள் சாத்திர புராணங்கள் போற்றும்
ஆமருவியப்பன் கேசவன் அவனது
சரணம்
பாமரர் பண்டிதர் சுக சனகாதியர்
நாரதர் நான்முகன் நரர் சுரரிந்திரன்
பூமண்டலத்தோர் அனைவரும் வணங்கிடும்
கோமகனே கோதண்டராமனே உனது
No comments:
Post a Comment