ஶ்ரீ ஸ்துதி:(2).....!!!
ஆவிர்ப்பாவ: கலச ஜலதாவத்வரே வாபி யஸ்யா:
ஸ்த்தாநம் யஸ்யா: ஸரஸிஜ வநம் விஷ்ணுவக்ஷ: ஸ்த்தலம் வா |
பூமா யஸ்யா புவந மகிலம் தேவி திவ்யம் பதம் வா
ஸ்தோகப்ரஞை: ரநவதிகுணா: ஸ்தூயஸே ஸா கதம்த்வம் ||
பெரிய பிராட்டியே ! உன்னைத் துதிக்க முற்படுகின்றேனே! உன் பெருமையை ஆராய்ந்தால் நான் செய்வது முறையா?
உன் பிறப்பு என்ன! முதலில் திருப் பாற்கடலில் தோன்றினாய். பின் சீதையாக அவதரித்த போது ஜநகன் வேள்விச் சாலையில் தோன்றினாய். இந்த இரண்டு தோற்றங்களிலும் கர்ப்ப வாஸம் உனக்கு இல்லாததால் உன் நாயகனை விட மேம்பட்டு விளங்குகின்றாய்.
நீ வாழும் இடம் எத்தகையது. அது இயற்கைத் தூய்மை, இயற்கை மணம் முதலிய, சிறப்பு பெற்ற தாமரைக்காடும், ஸர்வேச்வரனது திரு மார்பும். இந்தப் பெருமை வேறு யாருக்கேனும் உண்டா ?
உன் செல்வம் எத்தகையது. லீலா விபூதி எனப்படும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நித்ய விபூதி எனப்படும் ஶ்ரீ வைகுண்டமும் உனது ஆளுகைக்கு உட்பட்ட செல்வங்களை தாமே.
உன் திருக் கல்யாண குணங்கள் எங்கே? அவை எல்லை அற்றவை. ஒவ்வொரு குணத்தைப் பார்த்தாலும் ஒவ்வொன்றும் எல்லை அற்று விளங்குகிறது.
இப்படி ஒவ்வொரு அம்சத்திலும் ஒப்பற்ற பெருமையுடன் விளங்கும் உன்னை அடியேன் போன்ற சிற்றறிவினர் எவ்வாறு துதிக்க முடியும் ?
Oh Mother Perum Devi! The places of Your avathAram are the Milky Ocean and the Yaaga SaalA of Janaka Rishi. Your places of residences are the lotus ponds and Your Lord's chest. All the worlds (both Nithya VibhUthi and LeelA VibhUthi) are Your wealth. It is impossible therefore to assess the greatness of Your vast wealth; when it is so, how can men of limited intellect attempt to praise Your glories adequately. It is ofcourse impossible.
அருகதை…….
பல்லவி
அருகதை உள்ளவனோ அடியேன் தாயே உன்
பெருமைகளை எடுத்துரைக்க பெரிய பிராட்டியே
அனுபல்லவி
திருப்பாற்கடலில் உதித்த அலைமகளே
திருமால் கேசவன் மார்பிலுறைபவளே
சரணம்
திருமகளே ஜனகனின் யாகசாலையில்
பெருமை மிகு ஜானகியாய் அவதரித்தவளே
கர்பவாசம் அறியாதவளே
தாமரை மலர்தனில் வீற்றிருப்பவளே
எல்லையிலாச் சிறப்புடைய வைகுண்டம் என்னும்
செல்வபுரத்தில் அமர்ந்திருப்பவளே
பல்வகையான மாட்சிமையுடையவளே
செல்வத்தின் அதிபதியே மகாலக்ஷ்மியே